PUBLISHED ON : மார் 11, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., சார்பில், மும்மொழி கொள்கையை ஆதரித்து ராமநாதபுரத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில பொதுச் செயலர் பொன்.பாலகணபதி பேட்டி அளித்தார்.
அவரிடம், ராமநாதபுரத்தில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், 'அண்ணாமலை ஒரு அரைவேக்காடு, ஐ.பி.எஸ்., படித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது' என விமர்சித்தது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பொன்.பாலகணபதி, 'நாஞ்சில் சம்பத் ஒரு கட்சியில் உருப்படியாக இருக்க மாட்டார். அவர் வாயை வாடகைக்கு விட்டு பிழைத்து வருகிறார். ஒரு முறை அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசியதற்கு இன்னோவா கார் வாங்கினார். இம்முறை அண்ணாமலை பற்றி பேசினால், தி.மு.க.,வில் உயர் ரக கார் வழங்க உள்ளதாக கூறுகின்றனர்.
'அதனால், நாஞ்சில் சம்பத் அதிகமாக கூச்சலிடுகிறார். எங்கள் கட்சியை பற்றி பேசுவதால், அவருக்கு கார் பரிசாக கிடைத்தால் எங்களுக்கு சந்தோஷம் தான்' எனக் கூற, சுற்றியிருந்த பா.ஜ., நிர்வாகிகள் சிரித்தனர்.