PUBLISHED ON : ஏப் 28, 2024 12:00 AM

திருச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை, அரசு ராணியார் நடுநிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஓட்டளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'இந்திய அளவில், இண்டியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. குஜராத்தில் கூட பா.ஜ., வெற்றி பெறுவது கடினம். இந்த தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் எங்களுக்கு எதிரிகளே இல்லை. கடந்த தேர்தலில் எங்களுடைய எதிரிகள் கண்ணுக்கு தெரிந்தனர்; போட்டி இருந்தது. இந்த தேர்தலில், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எங்களுக்கு எதிரிகளே இல்லை' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இது மோசமான வார்த்தையாச்சே... ஜெயலலிதா கூட முன்னே இப்படி தான் சொன்னாங்க... இன்னைக்கு அவங்க கட்சி இருக்கிறநிலைமையை எல்லாம் இவர் யோசித்து பார்க்கணும்...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.

