PUBLISHED ON : ஏப் 12, 2024 12:00 AM

கிருஷ்ணகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் கூட்டம் பெரிய அளவில் இல்லை. சொந்த கட்சியினரும் பெரிதாக அவருக்கு ஒத்துழைக்கவில்லை.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தெலுங்கு வருடப்பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, குந்தாரப்பள்ளியில் நடந்த ஆட்டுச்சந்தையில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் திரண்டிருந்தனர்.
பிரசாரத்திற்கு சென்ற போது, இதை பார்த்த நரசிம்மன், பிரசார வேனை அங்கு கொண்டு சென்று நிறுத்தி, கூடியிருந்தவர்களை பார்த்து கையசைத்து, அதை போட்டோ எடுத்துக் கொண்டார்.
தன் பிரசாரத்திற்கு கூட்டம் கூடியதாக, சமூக வலைதளங்களில் அந்த படங்களை பதிவிட்டார். இதைப் பார்த்த அக்கட்சி நிர்வாகிகள், 'ஆடு வாங்க வந்தவங்க வெளியே போக முடியாதபடி வழியை அடைத்து போட்டோ எடுத்து, இப்படி பப்ளிசிட்டி பண்றாரே... இவர் கெட்டிக்காரர் தான்...' என, முணுமுணுத்தனர்.

