PUBLISHED ON : ஏப் 10, 2024 12:00 AM

திருவள்ளூர் -- தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து, சென்னை, செங்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், 'டவுன் பஸ்களில் கட்டணமில்லா பயணம், பெண்களுக்கு பெரிய உதவியாக உள்ளது. மதுரையைச் சேர்ந்த பெண், மதுரை, திண்டுக்கல், திருச்சி, உளுந்துார்பேட்டை செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக, டவுன் பஸ்களில் கட்டணமின்றி பயணித்து, சென்னை கல்லுாரியில் படிக்கும் மகளை சந்தித்தார்.
'அதனால், அவருக்கு, 1,366 ரூபாய் மிச்சமானது. மீண்டும் அதே வழியில், அந்த கெட்டிக்கார பெண், மதுரை சென்றார். தயவு செய்து எல்லாரும் அவரை போல் பயணிக்காதீர்கள். போக்குவரத்து துறை போண்டியாகி விடும்' என்றார்.
இதைக் கேட்ட பெண் ஒருவர், 'நல்ல அறிவுரை தான்... ஆனால், இதை தமிழக அரசிடம் தான் இவர் சொல்லி இருக்கணும்...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

