PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கட்டுமான அமைப்புசாரா தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது, நலவாரிய, 'சர்வர்' பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களின் தரவுகள் அழிந்ததை சுட்டிக்காட்டி, தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆவேசமாக பேசினர்.
கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் பேசுகையில், 'சமீபத்தில் உலகம் முழுதும் விமான இயக்கம் நின்னு போச்சு; யாரைப் போய் கேட்க முடியும்... போன் பேசிட்டே இருக்கோம்; திடீர்னு சிக்னல் கிடைக்கல. யாரை கேட்க முடியும்... இதெல்லாம் எதிர்பாராமல் நடைபெறுவது. நல வாரிய சர்வர் பாதிப்புகளை சரி செய்ய, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' என்றார்.
தொழிற்சங்க பிரதிநிதி ஒருவர், 'யாரை கேட்க முடியும்னு உதாரணங்களை சொல்லி, இவரை எதுவும் கேட்கக் கூடாதுன்னு சொல்றாரு... வாரியம் உருப்பட்ட மாதிரி தான்...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள், 'ஆம்' என்பதற்கு அறிகுறியாக தலையை ஆட்டினர்.

