PUBLISHED ON : ஆக 30, 2024 12:00 AM

பெரம்பலுார் மாவட்டத்தில், அரசின் கனவுஇல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதிய வீடுகள்கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழாவில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார்.
கலெக்டர் கிரேஸ் பச்சாவ், தலைமை வகித்தார். அவருக்கு தமிழ் பேச தெரியாது. தன்னை சந்திக்கும் பொதுமக்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரிடமும்ஆங்கிலத்தில் பேசி வருகிறார். ஆங்கிலம் தெரியாதவர்கள் கலெக்டர் பேசுவது புரியாமல் தவித்ததால்,அது குறித்து சர்ச்சை எழுந்தது.
இதனால், அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழில் பேச, முன்கூட்டியே பயிற்சி எடுத்து, ஒரு பேப்பரில் டைப் செய்து எடுத்து வந்திருந்தார். அதைப் பார்த்து கொஞ்சும் தமிழில் பேசினார். இடையிடையே ஆங்கிலமும் கலந்து வந்தது.
பார்வையாளர் ஒருவர், 'இளம் அதிகாரியான இவங்க தமிழகத்தில் தான் தொடர்ந்து வேலை செய்யணும்... கட்டாயம் தமிழ் கத்துக்கணும்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.