PUBLISHED ON : மே 21, 2024 12:00 AM

நாமக்கலில் நடந்த மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார். கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசுகையில், 'கட்சியை பலப்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் இந்த கட்சியில் பணிபுரியலாம். தெலுங்கானாவில் காங்., ஆளுங்கட்சியாக உள்ளது. அந்நிலை தமிழகத்தில் வர வேண்டும். தனிப்பட்ட வெறுப்புகளை கட்சியில் புகுத்தாதீர்கள்.நாம் உழைக்கவில்லை. மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. அதனால் தான் நமக்குள் இந்த ஈகோ பிரச்னை. நம் தலைமுறையில், கட்சியை தமிழகத்தில் ஆளுங்கட்சியாக கொண்டு வர பாடுபட வேண்டும்' என்றார்.
கட்சி நிர்வாகி ஒருவர், 'தேர்தல் முடிஞ்சிட்ட தைரியத்துல தான் தி.மு.க., கோபிச்சிக்கும்னு தெரிஞ்சும் நம்ம தலைவர் இப்படி எல்லாம் பேசுறார்...' என, முணுமுணுக்க, மற்றொரு நிர்வாகி, 'இதென்னங்க கொடுமை... காலத்துக்கும் அவங்களுக்கு சாமரம் வீசிட்டே இருக்கணுமா...?' என, பொங்கியபடி நடையை கட்டினார்.

