/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'இண்டியா அணியினரும் இப்படி தான்...!'
/
'இண்டியா அணியினரும் இப்படி தான்...!'
PUBLISHED ON : ஜூன் 03, 2024 12:00 AM

கோவை, காந்திபுரம் நகர பஸ் ஸ்டாண்டிற்கு முன், பாரதியார் சாலையில், கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர், டவுன் பஸ்களை ஆய்வு செய்தார். அவ்வழியே வந்த தனியார் டவுன் பஸ்சை நிறுத்தி, ஆய்வு செய்த போது, டிரைவர், கண்டக்டர்கள் பவ்யமாக சிரித்தபடியே, மோட்டார் வாகன ஆய்வாளருக்கு வணக்கம் வைத்தனர்.
'வணக்கமெல்லாம் இருக்கட்டும்; டிக்கெட் கட்டணம் தாறுமாறா போகுதாம்... கொண்டா இன்வாய்சை...' என, கண்டக்டரிடமிருந்த, 'இன்வாய்ஸ்' சீட்டை வாங்கி சரிபார்த்தார். அப்போது, 'சிங்காநல்லுாரில் இருந்து காந்திபுரத்திற்கு எவ்வளவு கட்டணம்' என, ஆய்வாளர் கேட்க, பதில் சொல்லாமல் திணறினார் கண்டக்டர்.
'இன்வாய்ஸ் கொடுங்க மேடம்; பாத்து சொல்றேன்' என, கண்டக்டர் சொல்லவே, 'டிக்கெட் கட்டணமே தெரியாம எப்படிய்யா கண்டக்டரா இருக்கற...' என, கேட்ட அதிகாரி, அந்த கண்டக்டருக்கு அபராதம் விதித்தார். அதை பார்த்த பயணி ஒருவர், 'இப்படித் தான், 'இண்டியா' கூட்டணி தலைவர்களும், இந்த கண்டக்டர் மாதிரி தான் அரசியல் பண்றாங்க...' என, ஜாடை மாடையாக முணுமுணுத்தபடி சென்றார்.