PUBLISHED ON : ஏப் 02, 2024 12:00 AM

காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செல்வம் அறிமுக கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடந்தது. இதில், 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ம.தி.மு.க., மாவட்ட செயலர் பார்த்திபன் பேசுகையில், 'காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் நம் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்து வருகிறது. திருப்போரூர் ஒன்றியத்தில் கூட்டம் சிறப்பாக நடந்தது. கூட்டத்தை அந்த பகுதி தி.மு.க., ஒன்றிய செயலர் இதயவர்மன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இங்கு அந்தளவு கூட்டம் இல்லை. இதற்கு வெயில் கூட காரணமாக இருக்கலாம்' என்றார்.
இதைக் கேட்ட கூட்டணி கட்சி நிர்வாகி ஒருவர், 'மறைமலை நகரில் வெயில் அடிக்குதுன்னா, இங்கிருந்து 20 கி.மீ., துாரத்துல இருக்கிற திருப்போரூரில் குளுகுளுன்னா இருக்கும்... அங்கேயும் வெயில் தான் அடிக்கும்... ஏற்பாடு சரியில்லாததுக்கு எதுக்குசப்பைக்கட்டு...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

