PUBLISHED ON : ஏப் 29, 2024 12:00 AM

நீலகிரி லோக்சபா தொகுதியில், 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 'நோட்டா'வுடன் சேர்ந்து, 17 சின்னங்கள் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியிருந்தது. ஒரு இயந்திரத்தில் அதிகபட்சமாக, 16 வரிசை மட்டுமே இடம் பெற முடியும் என்பதால், நோட்டாவுக்கு தனியாக ஒரு இயந்திரம் வைத்தனர். வேட்பாளர்களுக்கு ஒரு இயந்திரமும், நோட்டாவுக்கான ஒரு இயந்திரமும் அருகருகே வைக்கப்பட்டன.
நோட்டா சின்னம், இரண்டாவது இயந்திரத்தின் முதல் வரிசையில் இடம் பெற்றதால், விபரம் அறியாத பலரும், நோட்டாவுக்கு ஓட்டளித்தனர்.
ஓட்டுச்சாவடி அலுவலர் ஒருவர், 'பா.ஜ., வேட்பாளர் முருகன் பெயரில், சுயேச்சை வேட்பாளரை திராவிட கட்சிகள் தான் களம் இறக்கியிருக்கும்... அவர் போட்டியிடாமல் இருந்திருந்தால், ஒரு இயந்திரத்துடன் வேலை முடிந்திருக்கும்... இப்ப, நோட்டா வாங்குற ஓட்டு, யாரை கவிழ்த்து விடப் போகுதோ...' என, முணுமுணுத்தனர்.

