PUBLISHED ON : மே 20, 2024 12:00 AM

வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள, அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், காங்., மூத்த தலைவர் குமரி அனந்தனை, அவரது மகளும், பா.ஜ., தென் சென்னை தொகுதி வேட்பாளருமான தமிழிசை, சமீபத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'வேலுாருக்கு, 'வந்தே பாரத்' ரயிலில் வந்தேன். இது, மக்களுக்கு வசதியாக உள்ளது. விமானத்தில் கிடைக்கும் வசதி, வந்தே பாரத் ரயிலில் கிடைக்கிறது. 'புல்லட்' ரயில், சென்னையிலிருந்து மைசூருக்கு இயக்கப்பட உள்ளது. மத்தியில் மீண்டும், பா.ஜ., அரசு அமையும் அளவிற்கு தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்பது என் கருத்து' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், '400 தொகுதிகளில் ஜெயிப்போம்னு சொன்னவங்க, இப்ப ஆட்சி அமைக்கும் அளவுக்குனு பம்முறாங்களே...' என, முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'அதை விடுங்க... தென் சென்னை தொகுதியில் இவங்க ஜெயிப்பாங்களா...' என, கேட்க, 'எல்லாம், ஜூன் 4ல் தெரிஞ்சிடும்...' என, மூத்த நிருபர் ஒருவர் முணுமுணுத்தபடி நடந்தார்.

