PUBLISHED ON : மே 02, 2024 12:00 AM

சென்னை, அம்பத்துாரில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட செயலர் அலெக்சாண்டர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது அலெக்சாண்டர், 'புரட்சி தலைவி அம்மா வாழ்க... புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., வாழ்க... கழக பொதுச் செயலர் எடப்பாடியார் வாழ்க...' என, மூன்று முறை கோஷமிட்டார். அவரை தொடர்ந்து கட்சியினரும் கோஷமிட்டனர்.
தொடர்ந்து, 'வருங்கால முதல்வர் எடப்பாடியார் வாழ்க...' என்று ஓரிரு முறை கோஷமிட்டு, 'அவ்வளவு தான்...' என்று, சிரித்தபடியே ரிப்பன் வெட்டி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதை பார்த்த பார்வையாளர் ஒருவர், 'முன்பெல்லாம் கட்சி தலைவர்கள் மேல் உள்ள உண்மையான பற்றுக்காக கோஷம் போடுவாங்க... இப்ப கடமைக்கு கோஷம் போடுறாங்க...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

