PUBLISHED ON : ஆக 17, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்று, ரங்கநாயகி மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பதவியேற்றுக்கொண்ட அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர்களிடம்ரங்கநாயகி பேசுகையில், 'என் வார்டு குறித்து தெரியும்.மாநகரம் குறித்து ஒவ்வொன்றாக தெரிந்து கொள்கிறேன்' என்றார். தொடர்ந்து, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் அளித்து, நழுவினார்.
மூத்த நிருபர் ஒருவர், 'தனது வார்டு குறித்து மட்டும்தெரியும் என்கிறாரே... இத்தனை நாள் என்ன வெளிநாட்டிலா இருந்தார்...' என முணுமுணுக்க, மற்றொருநிருபர், 'இவங்களாவது இப்ப தான் பதவியேற்குறாங்க... மூணு வருஷமா மேயரா இருக்கிற பலரும்இன்னும் மாநகராட்சி நடைமுறை தெரியாம இருக்காங்களே...' என, 'கமென்ட்' அடிக்க, பலரும் ஆமோதித்து தலையாட்டினர்.

