PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியகூட்டம், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சேர்மன் தங்க தனம்தலைமையில் நடந்தது. இதில், 10வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கலைச்செல்வி பேசுகையில், 'மஸ்துார் பணியாளர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. சம்பளம் மட்டும் கரெக்டா கொடுக்குறீங்க... இருக்கிற, 27 ஊராட்சிகளுக்கு, 40 ஊழியர்கள் தேவையில்லை' என்றார்.
இதற்கு, பி.டி.ஓ., சந்தானம், '100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள், வேலை செய்யாமல்மரத்தடியில் ஓய்வெடுத்து, குறைந்தபட்சம், 260 ரூபாய் ஊதியம் வாங்குறாங்க... அதை நீங்கள் கண்காணிக்கலாம். அந்த தொழிலாளர்களை ஏன் குறைக்கக்கூடாது?' என, எதிர் கேள்வி எழுப்பினார்.
இதைக் கேட்ட கவுன்சிலர் ஒருவர், '100 நாள் வேலையை கண்காணிப்பது உங்கள் வேலை; அதற்கு தான் யூனியன் ஆபீசில் அவ்வளவு பேர் சம்பளம் வாங்கிட்டு இருக்கீங்க...' என பதிலளித்ததும்,பி.டி.ஓ., அமைதியானார்.
இதைப் பார்த்த ஊழியர் ஒருவர், 'பி.டி.ஓ., வாயை கொடுத்து வீண் வம்பை வாங்குறாரே...' என, முணுமுணுத்தபடி நடந்தார்.