PUBLISHED ON : அக் 03, 2025 12:00 AM

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், இயற்கை முறையில் மக்காச்சோளம் சாகுபடி செய்து வரும் விவசாயிகள், 'ஆத்துார், தலைவாசல் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள செடிகளில், அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.
வேளாண் அதிகாரிகள், 'ரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்தினால் படைப்புழுக்கள் அழிந்து விடும்' என, தெரிவித்தனர். அதற்கு விவசாயிகள், 'நஞ்சில்லா விவசாயம் செய்து வரும் எங்களை, ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த சொல்வது சரியா' என, கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க முடியாமல் வேளாண் அதிகாரிகள் நெளிந்தனர்.
விவசாயி ஒருவர், 'மண்ணை மலடாக்கத் தான் வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்குறாங்க... இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க எதுவும் செய்றதில்லை...' என, புலம்பியபடியே கிளம்பினார்.