PUBLISHED ON : ஆக 08, 2026 12:57 AM

ஈரோட்டில் சமீபத்தில் புத்தகத் திருவிழா நடந்தது. த.வெ.க.,வைச் சேர்ந்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், புத்தகத் திருவிழாவை பார்வையிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டியில், 'பள்ளி மாணவர்களுக்கு, வாரத்தில் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க ஆய்வு நடக்கிறது. தி.மு.க., முன்னாள் எம்.பி.,யான டி.கே.எஸ்.இளங்கோவன், 'பள்ளிகளில் சிக்கன் பிரியாணி வழங்கினால், அங்குள்ள சைவம் சாப்பிடும் குழந்தைகள் என்னாவர்' எனக் கேட்கிறார்.
'சிக்கன் பிரியாணி சாப்பிட்டு, குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் எனக் கூறும் முதல் நபராக அவரை பார்க்கிறேன். சிக்கன் பிரியாணி சாப்பிட்டு, ஒரு குழந்தை கெட்டுப் போய் விடுமா என்ன?' என்றார்.
இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'சைவம் சாப்பிடும் குழந்தைகளுக்கு என்ன சாப்பாடு தருவீங்கன்னு இளங்கோவன் கேட்டதுக்கு பதில் தராம, சிக்கன் பிரியாணிக்கு வக்காலத்து வாங்குறாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
