தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'திருமா இடத்தை பிடிச்சிடுவார்!'

 'திருமா இடத்தை பிடிச்சிடுவார்!'

 'திருமா இடத்தை பிடிச்சிடுவார்!'


PUBLISHED ON : ஆக 07, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சமீபத்தில் திருவாரூரில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, 2,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டெல்டாவில் கருகிப் போய் இருக்கும் நெற்பயிர்களை முதல்வர் விஜய் பார்வையிட வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 25,000 ரூபாய் வறட்சி நிதியாக வழங்க வேண்டும்.

'தி.மு.க., ஆட்சியில் புகார் வந்தால், அதை உடனே சரிசெய்வர். ஆனால், அது ஒரு பேசுபொருளாக, நாளிதழ்களில் வரக்கூடிய செய்தியாக ஆனதில்லை. 'எல்லாவற்றுக்கும் தி.மு.க., ஆட்சி தான் காரணம்' என, தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்வது கையாலாகாத்தனம்' என்றார்.

இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'தி.மு.க., கூட்டணியில் இருந்து, அந்தக் கட்சிக்கு பாராட்டுப் பத்திரம் வாசிச்சிட்டு இருந்த திருமாவளவன் இடத்தை, இவர் சீக்கிரம் பிடிச்சிடுவார் போலிருக்கே' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us