PUBLISHED ON : ஆக 06, 2026 01:48 AM

சென்னை, வண்ணாரப்பேட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தி.மு.க., இளைஞரணி செயலரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், 'நீட் தேர்வு எதிர்ப்பு என்பது தமிழகத்திற்கு புதிதல்ல. துவக்கம் முதலே ஆர்ப்பாட்டம், போராட்டம், கையெழுத்து இயக்கம் என பல வடிவங்களில், நீட்டுக்கு எதிராக தி.மு.க., போராடுகிறது.
'நீட் விலக்கு வேண்டுமென அப்போதைய முதல்வர்ஸ்டாலின், சட்ட முன்வடிவை கொண்டு வந்தார்.அதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை. அதற்காக, உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய இயக்கம் தி.மு.க., தான்' என்றார்.
இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'இவ்வளவு போராட்டங்கள் நடத்தியும், இவங்களால நீட் தேர்வை ஒழிக்க முடியலையே...' என முணுமுணுத்தார்.
அருகில் இருந்தவர், 'அது, நம்மை விட தி.மு.க.,வினருக்கு நல்லாவே தெரியும்... சும்மா நீட்டை வச்சு அரசியல் பண்றாங்க... அவ்வளவு தான்' என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
