PUBLISHED ON : ஆக 05, 2026 12:00 AM

காங்கிரஸ் சார்பில், தமிழகத்தில் உள்ள அக்கட்சி மாவட்டத் தலைவர்களுக்கு, இயக்க மறுசீரமைப்பு திட்ட பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் சமீபத்தில் 10 நாட்கள் நடந்தது.
கடைசி நாளில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கலந்து கொண்டு, மாவட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். 'நீட்' தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் தொண்டர்கள் பலர், ராகுலை சந்திக்க அழைத்து வரப்பட்டிருந்தனர்.
ராகுலை பார்ப்பதற்காக அழைத்து வரப்பட்டவர்கள், விடுதிக்குள் நுழைய முயன்றபோது, அவர்களிடம் அனுமதிச்சீட்டு இல்லாததால், போலீசார் அனுமதி மறுத்தனர். அப்போது, தங்களை அழைத்து வந்த காங்., நிர்வாகிகள் முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், காலை உணவு கூட வாங்கித் தரவில்லை என்றும் கூறி, அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
இதைப் பார்த்த காங்., நிர்வாகி ஒருவர், 'இப்படி இருந்தா, நம்ம கட்சி தமிழகத்துல ஆட்சியைப் பிடிச்ச மாதிரி தான்' என, தலையில் அடித்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
