PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

அரியலுாரில், தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் முதன்மை செயலரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான நேரு பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'இரண்டு மாதங்களுக்கு முன் வரை, சட்டசபை தேர்தல் சவால் நிறைந்ததாக இருக்கும் என நினைத்தோம். தற்போது, எந்தவித சஞ்சலமும், சலசலப்பும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்.
'பா.ஜ., கூட்டணியில் இணைந்தவுடன், அ.தி.மு.க., தொண்டர்கள் மனம் சோர்ந்து விட்டனர். 'ஆட்சி அமைந்தால், அமைச்சரவையில், பா.ஜ.,வும் பங்கு பெறும்' என்று, பா.ஜ.,வினர் கூறி வருவதால், அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது. பா.ம.க.,வில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, நமக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. அரியலுார், பெரம்பலுாரில் அது நமக்கு கூடுதல் பலம்...' என்றார்.
இதைக் கேட்ட தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'பா.ம.க., ரெண்டு அணியா பிரிஞ்சிருக்கே... நாம, எந்த அணியுடன் கூட்டணி சேரப் போறோம்னு தெரியலையே...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.

