PUBLISHED ON : ஜூன் 26, 2026 12:00 AM

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை கிராமத்தில் சமீபத்தில் பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற த.வெ.க., கொள்கை பரப்பு இணை செயலர் லயோலா மணி பேசும்போது, 'எங்கள் தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வராகி உள்ளார்; எம்.ஜி.ஆரையே மிஞ்சும் அளவிற்கு ஓட்டு சதவீதத்தை வைத்துள்ளார்.
'அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவரை மிஞ்சி ஒருவரும் முதல்வராக முடியாது. அடுத்து வரும் தேர்தல்களிலும், மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து ஆட்சி அமைப்போம்' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'அடுத்த 20 வருஷமும் உதயநிதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தானா...?' என, 'கமென்ட்' அடிக்க, சக தொண்டரோ, 'அதுக்கும் போட்டியா அண்ணாமலை வந்துட்டாரேப்பா...' என கூறியதும், அங்கு சிரிப்பலை எழுந்தது.
