தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/‘ரீல்ஸ் மோகத்துக்கு அளவில்லையா?’

‘ரீல்ஸ் மோகத்துக்கு அளவில்லையா?’

‘ரீல்ஸ் மோகத்துக்கு அளவில்லையா?’


PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சென்னை திருவொற்றியூர், கார்கில் நகர் பகுதியில், சமீபத்தில் கலெக்டர் மாலதி ஹெலன் ஆய்வு செய்தார். திருவொற்றியூர் த.வெ.க., – எம்.எல்.ஏ., செந்தில்குமார், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். அந்த குழுவினர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக நீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டனர்.

அப்போது, த.வெ.க.,வைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பகிங்ஹாம் கால்வாயின் பக்கவாட்டு சுவர் மீது ஏறி நின்றபடி, கால்வாய் பக்கமாக சாய்ந்த நிலையில், ‘ரீல்ஸ்’ போடுவதற்காக, தன் மொபைல் போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த நிருபர் ஒருவர், ‘இவங்க, ‘ரீல்ஸ்’ மோகத்துக்கு அளவே இல்லையா...? கீழே விழுந்து தொலைச்சா, யார் வந்து காப்பாத்துவாங்க’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us