PUBLISHED ON : அக் 30, 2024 12:00 AM

கடலுாரில் நடந்த அ.தி.மு.க., பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி, கோவை சத்யன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'வேலுார் பொதுக் கூட்டத்தில் நான் பங்கேற்ற போது, வரும் 2026 சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக உதயநிதி இருந்தால், தி.மு.க., இரண்டு, மூன்று அணிகளாக உடையும். அதில், கனிமொழி தலைமையில் கலைஞர் தி.மு.க., உருவாகும் என, பேசினேன்.
'அடுத்த இரண்டு வாரத்துக்கு, என்னை தொடர்ச்சியாகமொபைல் போனில் 500 பேர் அழைத்தனர். தி.மு.க.,வினர் என்னை திட்டப் போகின்றனர் என நினைத்தேன். ஆனால், பேசிய பலரும், உதயநிதிக்குஉள்ள தகுதி, எங்க அக்கா கனிமொழிக்கு இல்லையா...?எங்க மனதில் உள்ளதை நீங்க பேசிட்டீங்க' என்றனர். இதுதான் அந்த கட்சியின் நிலை' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இவங்க கட்சி மாதிரி தி.மு.க.,வும் ரெண்டு, மூணா உடையணும்னு ரொம்ப ஆசைப்படுறாரோ...?' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

