PUBLISHED ON : நவ 22, 2025 12:00 AM

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பேரிடர் கால விழிப்புணர்வு நிகழ்ச்சியை தீயணைப்பு துறையினர் நடத்தினர். தீ தடுப்பு, மின் விபத்து குறித்து, தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் விளக்கம் அளித்தார்.
அவர் பேசுகையில், 'மின் விபத்து அபாயம் உள்ளதால், சொந்த ஊர்களுக்கு செல்வோர், பிரிஜ்ஜை, 'ஆப்' செய்துவிட்டு செல்ல வேண்டும். அதில் அதிகபட்சம் என்ன இருக்கப் போகிறது?
'முந்தைய நாள் அரைத்த சட்னி, நாலாம் நாள் அரைத்த மாவு இதெல்லாம் தானே இருக்கப் போகுது. இதையெல்லாம் துாக்கி போட்டுவிட்டு, பாதுகாப்பாக பிரிஜ்ஜை ஆப் செய்துவிட்டு செல்லுங்கள்...' என்றார்.
இதை கேட்ட பெண் ஊழியர் ஒருவர், 'இவர் வீட்டுல, பிரிஜ்ல வச்ச சாப்பாட்டால ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போல தெரியுது... விட்டா, 'பிரிஜ்ஜையே துாக்கி கடாசிடுங்க'ன்னு சொன்னாலும் சொல்வார் போல...' என, 'கமென்ட்' அடிக்க, சக பெண் ஊழியர்கள் சிரித்தனர்.

