/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'ராமராஜ்யம் எதிர்பார்க்க முடியுமா?'
/
'ராமராஜ்யம் எதிர்பார்க்க முடியுமா?'
PUBLISHED ON : ஜூலை 09, 2025 12:00 AM

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே வைகுண்டபுரத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி நடந்த சமய மாநாட்டில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'உலகத்தில் கடவுள் வந்து ராஜாவாக ஆட்சி நடத்த வேண்டும் என காட்டியவர் ராமர். அதனால் தான், ராமராஜ்யம் என அழைக்கிறோம். மக்களாட்சியில் இருக்கும்போது, மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமர் ஒரு இலக்கணம்.
'பகலில் சென்றால் மக்கள் தடுப்பர் என்பதால், இரவில் காட்டுக்கு சென்றவர் ராமர். எதிரியாக இருந்தாலும் எப்படி சண்டை போட்டார், யுத்தத்தை எப்படி நடத்தினார் என்பதை பார்க்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் ஊறுகாய் அளவுக்கு கூட ராமராஜ்யம் இல்லை...' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'ராமரே கற்பனை பாத்திரம் என்பவர்களிடம் போய், ராமராஜ்யத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

