PUBLISHED ON : நவ 17, 2024 12:00 AM

கோவை, கவுண்டம்பாளைம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் நடந்த புதிய பள்ளி கட்டட திறப்பு விழாவில், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர்மகேஷ் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் வருகைக்கு முன், முன்னாள்முதல்வர் கருணாநிதி புகழ் பாடும் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. இதில், நாகூர் ஹனீபா பாடிய, 'கருணாநிதி வாழ்கவே' என்ற பாடல் ஒலிபரப்பாகி, பாதியில் நிறுத்தப்பட்டது.
தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர், 'மைக்செட்'காரரிடம் சென்று, 'கருணாநிதி இறந்து பல ஆண்டுகள்ஆகிவிட்டன... இப்ப போய் அவர் வாழ்கவேன்னு பாட்டு போடக்கூடாது... 'கருணாநிதி புகழ்' வாழ்கவேன்னு சொல்ற மாதிரி பாட்டு போடுங்க...' என்று அறிவுரை வழங்கியது தான், பாடலை பாதியில் நிறுத்த காரணம் என தெரிந்தது.
பார்வையாளர் ஒருவர், 'அது சரி... ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி வாழ்கவேன்னு பாடல்களை ரெடிபண்ணாம, இன்னும் அரைச்ச மாவையே அரைச்சா எப்படி...?' என, கிண்டல் அடித்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

