PUBLISHED ON : அக் 05, 2025 12:00 AM

அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அடிமையாக செயல்படும் அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக பழனிசாமி இருக்கிறார். ஆனால், சமூக நீதியை பாதுகாக்கும் ஒரு இயக்கமாக தி.மு.க., செயல்படுகிறது.
'வரும், 2026ம் ஆண்டு, திராவிட மாடல் ஆட்சியின் நாயகனாக, முதல்வர் தன்மானத்தோடு மீண்டும் தேர்தலில் வென்று, இரண்டாவது முறையாக பதவியேற்பார் என்பதில் சந்தேகம் இல்லை. நாங்கள் எதை சொல்கிறோமோ அதை தான் செய்கிறோம். எதை செய்கிறோமோ அதை தான் சொல்கிறோம். எதையும் திறந்த புத்தகமாக வெளிப்படையாக செயல்படுத்துகிறோம்...' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், '2021 சட்டசபை தேர்தலில் சொல்லியதை எல்லாம் செஞ்சுட்டாங்களா என்ன...?' என கேட்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.