/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'சினிமாவே எடுக்கிறாங்க தெரியுமா?'
/
'சினிமாவே எடுக்கிறாங்க தெரியுமா?'
PUBLISHED ON : அக் 08, 2025 12:00 AM

சென்னை மணலியில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று, செடிகளை நட்டு தண்ணீர் ஊற்றினார். பின், சாலைகளை பெருக்கி, சுத்தப்படுத்தும் புதிய இயந்திரங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த காட்சிகளை பத்திரிகையாளர்கள் உட்பட, 30க்கும் மேற்பட்டோர், தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த கட்சி நிர்வாகி ஒருவர், 'முன்பெல்லாம் தொலைக்காட்சி நிருபர் என்றால், வீடியோ கேமரா வச்சிருப்பாங்க... பார்த்தவுடனே தெரிஞ்சிடும்... இந்த காலத்துல, எல்லாருமே மொபைல் போனில் தான் எடுக்கிறாங்க... இதனால, யார் பத்திரிகையாளர்கள்னே தெரியலை...' என்றார்.
அருகில் இருந்த மற்றொரு நிர்வாகி, 'இப்ப எல்லாம், சினிமாவையே மொபைல் போன்ல எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க தெரியுமா...?' என, 'கமென்ட்' அடித்தபடியே கிளம்பினார்.