தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/‘தனியாரிடம் இவங்க வாங்கலையா?’

‘தனியாரிடம் இவங்க வாங்கலையா?’

‘தனியாரிடம் இவங்க வாங்கலையா?’

2


PUBLISHED ON : அக் 21, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க.,வைச் சேர்ந்த, தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் அப்பாவு சமீபத்தில் திருநெல்வேலியில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் த.வெ.க., அரசு பொறுப்பேற்றது முதல், மின் வெட்டு இல்லாத நாளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. தனியாருக்கும், அதானிக்கும் மின் துறையை தாரை வார்க்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாக உள்ளது.

‘துாத்துக்குடி, உடன்குடி, வடசென்னை, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் தேசிய சராசரியின்படி, 70 சதவீதம் மின் உற்பத்தி இருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, 30 – 34 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதே இதன் நோக்கம்’ என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘இவங்க ஆட்சியில, தனியாரிடம் மின்சாரம் வாங்காத மாதிரியே பேசுறாரே’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us