/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'தி.மு.க., கதிகலங்கி போயிடும்!'
/
'தி.மு.க., கதிகலங்கி போயிடும்!'
PUBLISHED ON : டிச 19, 2025 03:27 AM

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர், சங்கர். ராமேஸ்வரம் நகராட்சி, தி.மு.க., கவுன்சிலர் மற்றும், தி.மு.க., நகர பொருளாளராக இருந்தார்.
இந்நிலையில், தி.மு.க.,வின் ஹிந்து விரோத போக்கு மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, சமீபத்தில் பா.ஜ., நடத்திய பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலையில், சங்கர், பா.ஜ.,வில் இணைந்தார்.
அதே மேடையில் சங்கர் பேசுகையில், 'தி.மு.க., அரசு தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கடைப்பிடிக்கிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாதது கண்டனத்திற்குரியது...' என்றார்.
கீழே இருந்த பா.ஜ., தொண்டர் ஒருவர், 'சங்கருக்கு வந்த ரோஷம், தி.மு.க.,வில் இருக்கும் எல்லா ஹிந்துக்களுக்கும் வந்துட்டா, அந்த கட்சி கதிகலங்கி போயிடும் பா...' எனக் கூற, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

