PUBLISHED ON : டிச 20, 2025 12:37 AM

தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, சென்னை, திருவொற்றியூர் மத்திய பகுதி, தி.மு.க., பொறியாளர் அணி சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மணலி அண்ணா சிலை அருகே சமீபத்தில் நடந்தது.
இதில், தி.மு.க., துணை பொதுச்செயலர் திருச்சி சிவா பங்கேற்று பேசினார். கூட்டம் முடிந்ததும், அதில் பங்கேற்ற மக்களுக்கு நலத்திட்ட உதவியாக, சூடான உணவுகளை ஆறவிடாமல் பாதுகாக்கும், 'ஹாட் பாக்ஸ்'களை தி.மு.க.,வினர் வழங்கினர்.
இதை பார்த்த இளம் நிருபர் ஒருவர், 'பொதுவாக அரசியல் கட்சி கூட்டம்னா, வேட்டி, சேலைகள் தானே வழங்குவர். இங்க புதுசா ஹாட் பாக்ஸ்கள் தர்றாங்களே...' என்றார்.
இதற்கு பதிலளித்த மூத்த நிருபர், 'இது குளிர் காலமாச்சே... அதான் மக்கள், சுடச்சுட சாப்பிடட்டும்னு குடுக்கிறாங்க... காலத்துக்கு ஏற்ற இலவசங்களை குடுத்தால் தானே, மக்கள் மனசுல நிற்க முடியும்...' என்றபடியே, நடையை கட்டினார்.

