PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM

வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன், மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், 'மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது; ஆனால், எப்போது நடக்கும் என அறிவிக்கவில்லை. அடுத்த கணக்கெடுப்பு 2031ல் வரும் என தெரிகிறது.
'அப்போது, பா.ஜ., ஆட்சியில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. இப்போது இந்த அறிவிப்பை செய்திருப்பது கண்துடைப்புதான். தேர்தல் ஆதாயம் கருதி இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது...' என்றார்.
இதைக் கேட்ட இளம் நிருபர் ஒருவர், 'இதுவரைக்கும் மத்திய அரசுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தணும்னு சொன்னாரு... இப்ப, எடுக்கிறேன்னு அவங்க சொன்னதும், அதுலயும் குறை சொல்றாரே...' எனக்கூற, மூத்த நிருபர், 'மத்திய பா.ஜ., அரசு எது செஞ்சாலும் எதிர்க்கணும்... அப்பதானே, தி.மு.க., மனம் குளிரும்...' என, முணுமுணுத்தபடியே நடையைக் கட்டினார்.