/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'தனியாருக்கு வக்காலத்து வாங்குவதா?'
/
'தனியாருக்கு வக்காலத்து வாங்குவதா?'
PUBLISHED ON : மார் 25, 2025 12:00 AM

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தனியார் சந்தை கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்றனர். சந்தை தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது இருவரும் பங்கேற்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, சிலர் கருப்பு கொடி காட்டினர்.
விழாவில், அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, 'அனைத்தும் சட்டப்படியே நடக்கிறது' என, அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். மேலும், 'நகராட்சி நிர்வாகம் நடத்தி வந்த தினசரி சந்தையை சீரமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலானதும் கூட ஒருவகையில் நல்லதுதான். அதனால் தான் தனியார் சந்தையே வந்தது' என, அவர் பேசியதை கேட்டதும், மேடையில் இருந்த நகராட்சி தலைவர் கருணாநிதி நெளிந்தார்.
பார்வையாளர் ஒருவர், 'அரசு துறையை மட்டம் தட்டிட்டு, தனியாருக்கு அமைச்சரம்மா வக்காலத்து வாங்குறாங்களே...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.