/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போலீஸ் அதிகாரி பெயரில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகள்!
/
போலீஸ் அதிகாரி பெயரில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகள்!
போலீஸ் அதிகாரி பெயரில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகள்!
போலீஸ் அதிகாரி பெயரில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகள்!
PUBLISHED ON : டிச 18, 2025 03:14 AM

மெது வடையை கடித்தபடியே, “மாணவர் காங்கிரசாரை வளர விட மாட்டேங்கறார் ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“யாரு வே அது...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
“விருதுநகர் மாவட்டத்துல, மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமா கட்சி பணி செய்றாங்க... இதை, சிவகாசி தொகுதி காங்கிரஸ் முக்கிய புள்ளி விரும்பல ஓய்...
“தனக்கு போட்டியா வந்துடுவாளோன்னு, அவாளை மட்டம் தட்டறதுலயே குறியா இருக்கார்... அவரது துாண்டுதல்ல, மாணவர் காங்., நிர்வாகிகளுக்கு, போலீசாரும் தொல்லை குடுக்கறா ஓய்...
“காங்., மூத்த தலைவர் சோனியா பிறந்த நாளை ஒட்டி மாணவர் காங்., சார்பில், சமீபத்துல திருத்தங்கல்ல அன்னதானம் வழங்கினா... நிகழ்ச்சி முடிஞ்சதும், சாலையோரமா நின்னு பேசிண்டு இருந்தவாளை, அந்த வழியா வந்த போலீசார் மிரட்டியிருக்கா ஓய்...
“பதிலுக்கு மாணவர் காங்., நிர்வாகிகளும் வாக்குவாதம் பண்ண, பக்கத்துல இருந்தவா வந்து சமரசம் பண்ணியிருக்கா... 'சிவகாசி தொகுதியில், 'குட்கா' பொருட்கள் விக்கறவா மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கறதை விட்டுட்டு, எங்களை மிரட்டறதையே போலீசார் வேலையா வச்சிருக்கா... எல்லாத்துக்கும், சிவகாசி முக்கிய புள்ளிதான் காரணம்'னு மாணவர் காங்., நிர்வாகிகள் புலம்பறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“அசோக், தள்ளி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமியே, “இங்கிலீஷ்லயே தரக்குறைவா திட்டுறாருங்க...” என்றார்.
“யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய்.
“காஞ்சிபுரம் மாவட்ட உயர் அதிகாரியின் உதவியாளரைத் தான் சொல்றேன்... இவர், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தரக்குறைவா பேசுறாருங்க...
“குறிப்பா, பெண் ஊழியர்களிடம் சம்பந்தமே இல்லாம கேள்விகள் கேட்டு, இங்கிலீஷ்லயே திட்டுறாரு... ஏற்கனவே, வாக்காளர் திருத்த பட்டியல் பணியால கடும் பணிச்சுமையில் தவிச்சிட்டு இருக்கிற ஊழியர்களை, உதவியாளரும் மன உளைச்சல்ல தள்ளுறதால, அதிகாரிக்கு எதிரா போராட்டம் நடத்தலாமான்னு, அவங்க யோசனை பண்ணிட்டு இருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.
“ரவிச்சந்திரன், இதையும் கேட்டுட்டு கிளம்பும்...” என, நண்பரி டம் கூறிய அண்ணாச்சியே, “என்கிட்டயும் ஒரு அதிகாரி மேட்டர் இருக்குல்லா...” என்ற படியே தொடர்ந்தார்...
“கோவை மாநகர போலீஸ் உயர் அதிகாரி பேரை சொல்லி, கட்டப்பஞ்சாயத்துகள் அதிகம் நடக்கு... குறிப்பா, மாநகர குற்றப்பிரிவு போலீசில் தான் அதிகமான கட்டப் பஞ்சாயத்துகள் நடக்கு வே...
“இங்க வர்ற புகார்கள் மீது, பெரும்பாலும் வழக்கே பதிவு பண்றது இல்ல... அப்படியே வழக்கு பதிவு பண்ணிட்டாலும், கட்டப்பஞ்சா யத்து பேசி பிரச்னையை முடிச்சி, புகார்தாரர் மற்றும் எதிர் தரப்பிடம் பணத்தை கறந்துடுதாவ வே...
“இது சம்பந்தமா, போலீஸ் உயர் அதிகாரி யிடம் சிலர் புகார் குடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்ல... சமீபத்துல வக்கீல்கள் சிலர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி, கட்டப்பஞ்சாயத்து பத்தி பகிரங்கமாவே குற்றம் சாட்டினாவ வே...
“அதன்பிறகும் உயர் அதிகாரி அசைஞ்சு குடுக்கல... குற்றப்பிரிவில் நடக்கிற கட்டப்பஞ்சாயத்துகள் மூலமா, உயர் அதிகாரி இதுவரை பல கோடி ரூபாயை சம்பாதிச்சிட்டதா போலீசாரே பேசிக்கிடுதாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
“சரவணசுந்தர், இப்படி உட்காருங்க...” என்றபடியே அந்தோணி சாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

