/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'சிண்டு முடிஞ்சு பிரிச்சிடாதே!'
/
'சிண்டு முடிஞ்சு பிரிச்சிடாதே!'
PUBLISHED ON : ஜன 30, 2026 04:17 AM

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சிஞ்சு வாடி கிராமத்தில், அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயகுமார் ஏற்பாட்டில், 2,000 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், உடுமலைப்பேட்டை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசும்போது, 'இதுபோன்ற மக்களுக்கான நற்பணிகளை, அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற, நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர் ஒருவர், 'உடுமலை தொகுதியில், மீண்டும் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவாரா அல்லது அவருக்கு போட்டியா விருப்பமனு போட்டிருக்கிற ஜெயகுமார் போட்டியிடுவாரான்னு தெரியலையே...' என, முணுமுணுத்தார்.
அருகில் இருந்த மற்றொரு தொண்டர், 'ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற நல்ல உறவை, சிண்டு முடிஞ்சி பிரிச்சு விட்டுடுவே போலிருக்கே...' என்றபடியே, அங்கிருந்து நகர்ந்தார்.

