PUBLISHED ON : பிப் 06, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சோலையாறு அணை பகுதியில் நடந்தது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கந்தசாமி பேசுகையில், 'லோக்சபா தேர்தலில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடந்த முறை போல, இந்த முறை தொகுதியை பறிகொடுத்து விடக்கூடாது. இதற்கு தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே சாத்தியம்' என்றார்.
இதைக் கேட்ட கட்சி தொண்டர் ஒருவர், 'அட போங்கப்பா... தேர்தல் நேரத்துல இந்த மாதிரி கூட்டத்துக்கு வர்ற தொண்டர்களை மட்டன் பிரியாணி போட்டு கவனிக்காம, வெறும் முட்டை பிரியாணி கொடுத்திருக்கீங்க... அப்புறம் யார் கடுமையா உழைப்பாங்க...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் அதை ஆமோதித்து தலையாட்டினர்.

