PUBLISHED ON : செப் 22, 2026 12:56 AM

முன்னாள் அமைச்சரும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான பெரியசாமி, சமீபத்தில் திண்டுக்கல்லில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தமிழக தேர்தல் முடிவுகள் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால், இந்த முறை அரைகுறையாக தீர்ப்பு வந்து விட்டது. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை. வறட்சி, மின் தடை என பல பிரச்னைகளால் மக்கள் புழுங்கி, அழுத்தமாக உள்ளனர்; எப்போது வெடிப்பர் என தெரியாது. மக்கள் புரட்சி வெடித்தால், இவர்கள், 'ரீல்ஸ்' கதை இருக்காது. மக்கள் நிச்சயம் சரியான பதிலடி கொடுப்பர்.
'தமிழகத்தில் ஆணவ கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன; போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. முதல்வரின் கட்டுப்பாட்டில் போலீஸ் துறை இருக்கிறதா என்றே தெரியவில்லை' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இவங்க ஆட்சியில் ஆணவ கொலைகளே நடக்காத மாதிரி பேசுறாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.
