/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'எல்லாம் அதிகாரிகளுக்கே வெளிச்சம்!'
/
'எல்லாம் அதிகாரிகளுக்கே வெளிச்சம்!'
PUBLISHED ON : நவ 19, 2025 12:00 AM

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டில், சிறப்பு வார்டு சபை கூட்டம் நடந்தது. வார்டு உதவி பொறியாளர் மஞ்சுளா, சுகாதார ஆய்வாளர் பிரவீனா, குடிநீர் வாரிய உதவி பொறியாளர் நித்யா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்; இதில் ஒருசிலர் மட்டும் பங்கேற்று, வார்டு குறைகள் குறித்து பேசினர்.
செய்தி சேகரிக்க வந்திருந்த இளம் நிருபர் ஒருவர், 'வார்டு சபை கூட்டம் என்றால், கவுன்சிலர், வார்டு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்பர்.
'ஆனா, இந்த கூட்டத்தில், 7வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், வார்டு கமிட்டி உறுப்பினர்கள்னு யாருமே கலந்துக்கலையே... இந்த கூட்டம் செல்லுமான்னு கூட தெரியலையே பா...' என முணுமுணுக்க, மூத்த நிருபர், 'அதெல்லாம் அதிகாரிகளுக்கு தான் வெளிச்சம் பா...' என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

