PUBLISHED ON : ஜன 14, 2026 03:58 AM

சென்னை, திருவொற்றியூர் தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு சார்பில், ஓட்டுச்சாவடி முகவர்கள், கட்சி நிர்வாகிகள் என, 1,500 பேருக்கு, பேன்ட் - சட்டை, புடவை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதேபோல, மணலி தி.மு.க., மண்டல குழு தலைவர் ஆறுமுகம் தலைமையில், 10,000 பேருக்கு, பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட்டது. திருவொற்றியூர், 12வது வார்டு கவுன்சிலர் கவி.கணேசன் சார்பில், தி.மு.க., மூத்த தொண்டர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு பேன்ட் - சட்டை, புடவை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
இதை வாங்கிய தி.மு.க., தொண்டர் ஒருவர், 'போன வருஷம் பொங்கலுக்கு யாரும் கண்டுக்கல... இந்த வருஷம், தேர்தல் வருதுன்னதும் விழுந்து விழுந்து கவனிக்கிறாங்களே...' என புலம்ப, சக தொண்டர், 'அடுத்த வருஷம் பொங்கலுக்கு நம்மை மறந்துடுவாங்கப்பா...' என்றபடியே, நடையை கட்டினார்.

