PUBLISHED ON : ஜன 08, 2024 12:00 AM

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக்குழு கூட்டத்தில், தி.மு.க.,வை சேர்ந்த, 11வது வார்டு கவுன்சிலர் மாலினி பேசுகையில், 'கோவையில் தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர்கள் என, 11 பேர் பயனாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
'மகளிர் திட்டம் வாயிலாக இந்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அந்த, 11 பேரையும் விழாவுக்கு அழைக்கலாம் என தொடர்பு கொண்ட போது, ஒருவர் சென்னிமலை, இரண்டு பேர் வேறு மாவட்டம், மற்றொருவர் ஹிந்தி, மற்றொருவர் மலையாளத்தில் பேசினர். அந்த, 11 பேரும் ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர்கள் இல்லை. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், 'புகார் மனுவாக கொடுங்கள்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
மூத்த நிருபர் ஒருவர், 'பயனாளிகள் பட்டியலில் போலிகளை புகுத்துறதில் அரசியல்வாதிகளையே நம்ம அதிகாரிகள் மிஞ்சிடுவாங்களோ...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.