PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை மலைப்பட்டி பள்ளியில், தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில், 'வருமுன் காப்போம்' திட்ட முகாம் நடந்தது. வழக்கமாக, இதுபோன்ற விழாக்களில், உள்ளூர் பள்ளி மாணவர்களை கொண்டே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்.
சமீபகாலமாக, தமிழ்த்தாய் வாழ்த்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதால், இம்முறை, 'மாணவர்களை தவிர்த்து, நன்கு தெரிந்தவர்களை கொண்டே தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்' என, கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டது. இதனால், சுகாதார ஆய்வாளர்களான ஜெயகுமார், ஆரோக்கிய ஜேசுராஜ், யூசுப்கான் ஆகியோரே, பிழையின்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
இதை பார்த்த ஒருவர், 'இவ்வளவு தெளிவா பாடிட்டாங்களே... ராத்திரி முழுக்க முழிச்சிருந்து, மனப்பாடம் பண்ணிட்டு வந்திருப்பாங்களோ...?' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.

