PUBLISHED ON : அக் 29, 2024 12:00 AM

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்றார்.
அப்போது பேசுகையில், 'அடுத்த தீபாவளிக்கு அ.தி.மு.க., ஆட்சியில் இருக்கும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் தான், அ.தி.மு.க., ஆட்சியின் அருமை மக்களுக்கு தெரிகிறது. இந்த ஆட்சியின் ஒரே சாதனை, வாரிசுகளுக்கு பதவி கொடுத்தது தான். பொதுவாக அ.தி.மு.க.,வை வெல்வதற்கு யாரும் கிடையாது. அ.தி.மு.க., வீழ்கிறது என்றால், அதற்கு நாம் தான் காரணம். அ.தி.மு.க., மக்கள் விரும்பும் கட்சி; தி.மு.க., மக்கள் வெறுக்கும் கட்சி' என்றார்.
மூத்த நிர்வாகி ஒருவர், 'நம்ம எம்.எல்.ஏ., நல்லாரைமிங்கா பேசுறார்...' எனக் கூற, மற்றொரு நிர்வாகி,'தி.மு.க.,வோடு, தினகரனையும் சேர்த்து சட்டசபை தேர்தலில் ஜெயிச்சவராச்சே... அவர் தாராளமாபேசலாம்...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.

