PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

ம.தி.மு.க., -- எம்.பி., துரை வைகோ, திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அரசு பள்ளிகளை, தனியார் நிதி பங்களிப்புடன் மேம்படுத்தும் பள்ளிக்கல்வித்துறை திட்டம் குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த துரை வைகோ, 'அமைச்சர் மகேஷ் சிறப்பாக செயல்படுகிறார். அவரது பதவிக்காலத்தில் தமிழக பள்ளிக்கல்வி சர்வதேச தரத்திற்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இருந்த கல்வி அமைச்சர்களில், தற்போதைய மகேஷ் தான் சிறந்தவர்' என்றார். இதைக் கேட்டு, ம.தி.மு.க., நிர்வாகிகள் மட்டுமின்றி, தி.மு.க., நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க.,வில் அன்பழகன், தங்கம் தென்னரசு போன்ற சீனியர்கள் பலரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களா இருந்தும், மகேஷ் தான் சிறந்தவர்னு சொல்லிட்டாரே...' என முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'திருச்சியில் இவர் வண்டி ஓடணும்னா நேரு, மகேஷ் ஆதரவு வேணுமே... அதான் புகழ்ந்து தள்ளுறாரு...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

