/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
நெற்றி விபூதியை அழிச்சிட்டு 'போஸ்' கொடுத்தாரே!
/
நெற்றி விபூதியை அழிச்சிட்டு 'போஸ்' கொடுத்தாரே!
PUBLISHED ON : ஜன 04, 2026 02:53 AM

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மதுரை பழங்காநத்தத்தில், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருமாவளவன் மேடைக்கு வந்ததும், கட்சி நிர்வாகிகள் பலர் மேடையில் ஏறியதால், இடப் பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்த களேபரத்தில், சில நிர்வாகிகள் நீளமான வேல்கள், கிரீடத்தை திருமாவளவனுக்கு அணிவிக்க முயன்றனர். மூன்று நிர்வாகிகளிடம் மட்டும் வேல்களை வாங்கிய திருமாவளவன், 'இது, சனாதனத்தை சாய்க்கும் வேல்; சமத்துவம் காக்கும் வேல்' என்று பேசினார்.
இதை வேடிக்கை பார்த்த ஒருவர், 'கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இதே திருப்பரங்குன்றத்தில், தன் நெற்றியில் இருந்த விபூதியை அழிச்சிட்டு, போட்டோவுக்கு இவர், 'போஸ்' குடுத்தாரு... இப்ப, வேல் வாங்கிட்டாரே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர், 'எல்லாம் ஓட்டுகள் படுத்தும் பாடு...' என்றபடியே கிளம்பினார்.

