/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'பழனிசாமியை பாராட்டியிருப்பாரு!'
/
'பழனிசாமியை பாராட்டியிருப்பாரு!'
PUBLISHED ON : ஜன 02, 2026 02:14 AM

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில், தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. மாதவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனம் மற்றும் தி.மு.க.,வை ஆதரிக்கும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரான நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் கருணாஸ் பேசுகையில், 'ஜெ., தான் எனக்கு தேர்தலில் நிற்க சீட் கொடுத்தார். நின்றேன்; ஜெயித்தேன். ஜெ., மறைவுக்கு பின், என் வாழ்க்கையும் போய்விட்டது. அ.தி.மு.க., தலைவர்கள் ஏதாவது செய்வர் என நினைத்தேன்; எதுவும் செய்யவில்லை.
'அதனால், அங்கிருந்து வந்து விட்டேன். நான் எச்ச சோறு சாப்பிட மாட்டேன். கஞ்சியாக இருந்தாலும் உழைத்து தான் குடிப்பேன். கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்துவிட்டு, அ.தி.மு.க.,வை பா.ஜ.,விடம் அடமானம் வைத்தவர் பழனிசாமி...' என, ஆவேசமாக பேசினார்.
இதை கேட்ட தி.மு.க., தொண்டர் ஒருவர், 'அ.தி.மு.க., தரப்புல மட்டும் இவரை நல்லா கவனிச்சிருந்தா, இன்னைக்கு அங்க போய் பழனிசாமிக்கு பாராட்டு பத்திரம் வாசிச்சிட்டு இருந்திருப்பார்...' என, முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

