PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM

சேலம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
இதில், நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சியாளர் முகுந்தபூபதி பேசுகையில், 'பெண்களிடம் எந்த ரகசியமும் தங்காது. எந்த ஒரு விஷயமும், எளிதில் மக்களை சென்றடைய வேண்டும் என்றால், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதலில் பயிற்சி கொடுத்து விளக்கி விட்டால் போதும்... அவர்கள் வழக்கப்படி ஊர் முழுக்க பரப்பி விடுவர்.
'இந்த நம்பிக்கையில் தான் அரசு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது' என்றார். இதைக் கேட்டு அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர்.
முன்வரிசையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், 'நம்மை புகழுற மாதிரி இப்படி வாரி விடுறாரே... இது தெரியாம எல்லாரும் கை தட்டுறாங்களே...' என, முணுமுணுத்தவாறு நடையைக் கட்டினார்.