PUBLISHED ON : ஏப் 07, 2025 12:00 AM

காஞ்சிபுரம் அடுத்த வையாவூரில், 'சிட்கோ' தொழிற்பேட்டையை முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, வையாவூரில் நடந்த விழாவில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, சிட்கோ அதிகாரிகள் பங்கேற்றனர்.
இவ்விழாவில் பங்கேற்ற திருமுடிவாக்கம், 'பேஸ் - 2' தொழிற்சங்க தலைவர் பார்த்தசாரதி, சிட்கோ தொழிற்பேட்டை அமைத்த முதல்வருக்கும், துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தவர், கடைசியாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியை, தாசில்தாராக கருதி, 'தாசில்தாருக்கும் நன்றி' என்றார்.
அங்கிருந்த அரசு அதிகாரிகள், 'அவர் தாசில்தார் இல்லை; கலெக்டர்' என தெரிவித்தனர். சுதாரித்து கொண்ட பார்த்தசாரதி, 'கலெக்டர் கலைச்செல்விக்கும் நன்றி' என கூறி சமாளித்தார்.
பார்வையாளர் ஒருவர், 'தாசில்தாருக்கும், கலெக்டருக்கும் வித்தியாசம் தெரியாம எப்படி தொழிற்சங்க தலைவரா இருக்காரு...' என, முணுமுணுத்தபடியே நடந்தார்.

