PUBLISHED ON : ஜூன் 28, 2026 12:00 AM

தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் கோவையில் ஆய்வுக்கு வந்தார்.
நேரு ஸ்டேடியத்தில் மாணவ - மாணவியரின் தேவைகளை கேட்டறிந்தவரிடம், விளையாட்டு சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். முன்னதாக, அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
சால்வை அணிவித்த நிர்வாகிகளிடம், 'சால்வை எல்லாம் எதற்கு? நான் இன்று அமைச்சர் பதவி வகித்தாலும், என்றைக்கும் விளையாட்டு வீரன்தான்' என, தன்னடக்கமாக கூறியபடி மனுக்களை வாங்கி கொண்டார்.
அங்கிருந்த சங்க நிர்வாகிகளில் ஒருவர், 'ஒரு கூடைப்பந்து வீரரை, விளையாட்டு துறைக்கு அமைச்சர் ஆக்கியிருக்காங்க. வீரர்களின் கஷ்டங்கள் எல்லாம் இவருக்கும் தெரிஞ்சிருக்கும்... இவரால, விளையாட்டு துறைக்கு நல்லது நடந்தா சரிதான்...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
