PUBLISHED ON : செப் 18, 2026 02:06 AM

த.வெ.க., அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் ராமநாதபுரத்தில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டணி கட்சிகள் இல்லாமல் தி.மு.க., சார்பில் தனித்து நடந்ததால், வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. நிர்வாகிகள் மட்டுமே அதிக அளவில் மேடையை ஆக்கிரமித்து இருந்தனர்.
மேடையில் பேசிய தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'வழக்கமாக நாம் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில், கூட்டணி கட்சியினர் தங்களது பலத்தைக் காட்ட, தி.மு.க.,வை விட பெரிய பெரிய கொடிகளை கொண்டு வருவர். இதனால், தி.மு.க., கொடிகள் மறைந்து விடும். நீண்ட நாட்களுக்கு பின், தி.மு.க., கொடிகளை மட்டும் பரவலாக பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.
அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், 'கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத மாதிரியே பேசுறாரே... தி.மு.க., கொடிகள் மட்டும் தான் தெரியுது... ஆனா, கூட்டத்தை தான் காணலை' எனக் கூற, சக தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
