PUBLISHED ON : ஜூலை 07, 2026 12:00 AM

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்., கட்சியின் சரவணனும், துணை மேயராக தி.மு.க.,வின் தமிழழகனும் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தில், மேயருக்கு அருகில் இருந்த துணை மேயர் இருக்கையில் அமராத தமிழழகன், சக கவுன்சிலர்களுடன் கீழே அமர்ந்திருந்தார்.
மேயர் சரவணன், தமிழழகனை மேடைக்கு அழைத்தபோது, 'தேர்தலில், மக்களால் நாங்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டோம். இந்த புறக்கணிப்பை வெளிப்படுத்தும் விதமாக, அரசு காரை பயன்படுத்துவதில்லை என முடிவெடுத்து அதை திருப்பி கொடுத்து விட்டேன். அதேபோல், துணை மேயருக்கான இருக்கையிலும் அமர மாட்டேன்' என கூறிவிட்டார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'சீட்டையும், காரையும் திருப்பி குடுத்தா மட்டும் போதுமா...? துணை மேயர் பதவியையும் ராஜினாமா பண்ணிட்டா இவரை பாராட்டலாம்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.
